தமிழக செய்திகள்

தூத்துக்குடி: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை- போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மகள், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கல்லூரி மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கல்லூரி மாணவி

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சந்தையாடி தெருவைச் சேர்ந்தவர் லாமேக் வினோத். இவரது மகள் பெல்சியா (வயது 19), பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று வழக்கம் போல் கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெல்சியா, இரவு வீட்டின் தனி அறைக்குச் சென்றுள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, அறையின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் அவர் சடலமாகக் கிடந்துள்ளார்.

போலீசார் விசாரணை

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT