தமிழக செய்திகள்

தூத்துக்குடி: கண்மாய் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு- போலீசார் விசாரணை

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் ஏ.எம்.பட்டி கிராமத்தில் உள்ள கண்மாய் அருகே ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே தருவைகுளம் பகுதியில் கண்மாய் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் சடலம் மீட்பு

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் ஏ.எம்.பட்டி கிராமத்தில் உள்ள கண்மாய் அருகே ஆண் சடலம் கிடப்பதாக தருவைகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணை

விசாரணையில், சடலமாகக் கிடந்த நபருக்கு 45 முதல் 50 வயது இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் இறந்து சுமார் 10 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்பதால், உடல் மிகவும் அழுகிய நிலையில் எலும்புக்கூடு போல் காட்சியளித்தது. அதைத் தொடர்ந்து, உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வு மற்றும் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?

இச்சம்பவம் தொடர்பாக தருவைகுளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அவர் எப்படி இறந்தார், கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT