தமிழக செய்திகள்

தூத்துக்குடி: ஓடும் பேருந்தில் நெஞ்சுவலியால் டிரைவர் உயிரிழப்பு- பேருந்து மோதி வடமாநில தொழிலாளி படுகாயம்

திருச்செந்தூரில் அரசு மருத்துவமனையை தாண்டி சென்ற போது அரசுப் பேருந்து டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூ பகத்சிங் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் அரசுப் பேருந்து செம்மறிக்குளம் கிராமத்திற்கு புறப்பட்டது. பேருந்தை குலசேகரன்பட்டினம் வடக்கூரைச் சேந்த ஜெயசிங் மகன் அல்டாப் (வயது 48) ஓட்டினா. அப்போது அரசு மருத்துவமனையை தாண்டி சென்ற போது அரசுப் பேருந்து டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனையடுத்து பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த இருசக்கர வாகனத்திலும், நடந்து சென்ற வட மாநிலத் தொழிலாளி தினேஷ் மீதும் மோதி, அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் மின் கம்பம் உடைந்து விழுந்தது. தகவலறிந்த டி.எஸ்.பி. மகேஷ்குமா, போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமா உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று அரசுப் பேருந்து டிரைவரையும், காயமடைந்த வட மாநில தொழிலாளியையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா.

அங்கே, டிரைவரை பரிசோதித்த மருத்துவாகள் மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா. முதலுதவி சிகிச்சைக்குப் பின் வட மாநில தொழிலாளியை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா. மின்கம்பத்தில் பேருந்து மோதியதால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. மின்வாரியத்தினா விரைந்து வந்து பேருந்தை அகற்றி மின் வழித்தடத்தை சீரமைத்தனா.

வழக்கம் போல் பணிக்கு வந்த டிரைவருக்கு பேருந்தில் வைத்து திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அந்த நிமிடத்திலும் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்துவதற்கு முயற்சித்துள்ளா. அப்போது மின்கம்பத்தின் மீது பேருந்து மோதி நின்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் உயிர்த் தப்பினா. இந்த சம்பவம் குறித்து பேலீசார் விசாரணை நடத்தினர்.

SCROLL FOR NEXT