தமிழக செய்திகள்

தூத்துக்குடி: தேர்தல் பறக்கும் படையினர் இதுவரை ரூ.60.98 லட்சம் பணம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.6 லட்சத்து 80 ஆயிரத்து 640 மதிப்பிலான போதைப்பொருட்கள் பிடிபட்டுள்ளன என்று கலெக்டர் விஷூ மகாஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தணிக்கைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில், நேற்று வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரொக்கம் மற்றும் பொருட்களின் விவரங்களை தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள்:

மொத்த ரொக்கத்தொகை: 60 லட்சத்து 98 ஆயிரத்து 830 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மதுபானங்கள்: ரூ.4 லட்சத்து 8 ஆயிரத்து 449 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதைப்பொருட்கள்: ரூ.6 லட்சத்து 80 ஆயிரத்து 640 மதிப்பிலான போதைப்பொருட்கள் பிடிபட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.