தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 47). டிராக்டர் மூலம் கட்டுமானத் தொழிலுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜேசுராஜ் தனது டிராக்டரை கீழவாசல் பகுதியிலுள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலை அருகே வழக்கம்போல் நிறுத்திவிட்டு, சற்று தொலைவிலுள்ள வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது ஒரே பைக்கில் வந்த 3 வாலிபர்கள் காவல் நிலையம் அருகே அவரை வழிமறித்து அரிவாளால் தாக்கி, அவரிடமிருந்த செல்பேனை பயன்படுத்தி ஜி.பே. மூலம் ரூ.2,300 பணத்தை பறித்ததுடன், செல்பேனை உடைத்து எறிந்து விட்டு மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர்.
ஜேசுராஜ் ரத்த காயங்களுடன் தனது வீட்டுக்கு சென்றுள்ளா. குடும்பத்தினர் அவருக்கு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, பின்னா கோவில்பட்டி தனியா மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவுத செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.