தமிழக செய்திகள்

படகிலிருந்து தவறி கடலில் விழுந்த தூத்துக்குடி மீனவர்: தேடும் பணி தீவிரம்

கடல் கொந்தளித்ததால் நிலைதடுமாறி படகில் இருந்து கடலில் விழுந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் மட்டக்கடை பகுதியை சேர்ந்தவர் தம்பி ராஜ். இவர் சக மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். மீனவர்கள் மீன்களை பிடித்துக்கொண்டு நேற்று இரவு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

தவறி விழுந்தார்

கடற்கரையிலிருந்து சுமார் ஐந்து கடல் மைல் தொலைவில் அவர் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பலத்த காற்றுடன் கடல் கொந்தளித்தது. இதனால் தம்பிராஜ் நிலைதடுமாறி படகில் இருந்து கடலில் விழுந்தார். இதையடுத்து, சக மீனவர்கள் அவரை தேடினர். ஆனால் அவர்களால் தம்பிராஜை கண்டுபிடிக்க முடியவில்லை.

தேடும் பணி

தொடர்ந்து அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காணாமல் போன தம்பிராஜை கண்டுபிடிக்க உடனடியாகவும் உரிய முறையிலும் நடவடிக்கை எடுக்குமாறு மீன்வளத்துறையை மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT