தூத்துக்குடி,
தூத்துக்குடியில் பகல் நேரத்தில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பைக்கில் வந்து ஆட்டை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே, பகல் நேரத்தில் மேய்ச்சலுக்காக ஆடு ஒன்று நின்றுகொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்த ஆட்டை தூக்கிக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன.
இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆட்டை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.