தமிழக செய்திகள்

தூத்துக்குடி: கடலில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு- போலீசார் விசாரணை

தூத்துக்குடி புதிய துறைமுக முகத்துவாரத்திற்கு தெற்கே கடலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மிதப்பதாகக் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே கடலில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து கடலோரக் காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண் சடலம் மீட்பு

தூத்துக்குடி புதிய துறைமுக முகத்துவாரத்திற்குச் சற்று தெற்கே கடலில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மிதப்பதாகக் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற மீனவர் காலனி கடலோரக் காவல் நிலைய போலீசார், கடலில் மிதந்த சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இறந்து கிடந்த நபரின் பெயர், ஊர் மற்றும் வயது குறித்த விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கடலோர காவல் நிலைய போலீசார், உயிரிழந்தவர் யார்? அவர் எவ்வாறு கடலில் விழுந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.