கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தூத்துக்குடி - நரசப்பூர் சிறப்பு ரெயிலுக்கு கூடுதலாக 2 நிறுத்தங்கள்

தூத்துக்குடி - நரசப்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் 2 நிறுத்தங்களில் கூடுதலாக நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தூத்துக்குடி - நரசப்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயிலுக்கு கூடுதலாக 2 நிறுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தூத்துக்குடி - நரசப்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்கள் 06019/ 06020) பண்ருட்டி மற்றும் நாயுடுபேட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். தூத்துக்குடியில் இருந்து திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 9.03 மணிக்கு பண்ருட்டி ரெயில் நிலையத்தில் 1 நிமிடமும், மாலை 3.18 மணிக்கு நாயுடுபேட்டை ரெயில் நிலையத்தில் 2 நிமிடமும் நின்று செல்லும்.

மறுமார்க்கத்தில், நரசப்பூரில் இருந்து புதன்கிழமை காலை 4 மணிக்கு புறப்படும் ரெயில், நாயுடுபேட்டையில் பகல் 12.03 மணி முதல் 2 நிமிடமும், பண்ருட்டியில் மாலை 6.11 மணி முதல் 1 நிமிடமும் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT