தமிழக செய்திகள்

வாக்களிப்பதன் முக்கியத்துவம்; பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தூத்துக்குடி எஸ்.பி.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் நேற்று ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமுடிமண் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையமான புனித ஜோசப் துவக்க பள்ளி, கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புனித அலாய்சியஸ் மேல்நிலைப்பள்ளி உட்பட வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் மாவட்ட எஸ்.பி. அந்த பகுதி பொதுமக்களிடம் தேர்தலில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.