தமிழக செய்திகள்

தூத்துக்குடி-தாம்பரம் வாராந்திர ரெயில் அடுத்த மாதம் வரை நீட்டிப்பு

தாம்பரத்தில் இருந்து தஞ்சாவூர், மதுரை வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது.

மதுரை,

தென்மத்திய மண்டல ரெயில்வே சார்பில் தாம்பரத்தில் இருந்து தஞ்சாவூர், மதுரை வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, இந்த ரெயிலை நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 8-ந் தேதி வரையும், தாம்பரம்-தூத்துக்குடி சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 9-ந் தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரெயில் (வ.எண்.06018) திங்கட்கிழமை தோறும் நள்ளிரவு 11.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 2.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.

மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கத்தில், தாம்பரத் தில் இருந்து சிறப்பு ரெயில் (வ.எண்.06017) செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.20 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி ரெயில் நிலையம் சென்றடையும்.