தூத்துக்குடி
தூத்துக்குடி உடன்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
தூத்துக்குடியில் உடன்குடி பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், கடந்த மார்ச் 13-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின் உற்பத்தியை தொடங்கி வைத்தார். இந்நிலையில், அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பராமரிப்பு பணி காரணமாக முதல் அலகில் 660 மெகாவாட் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. . தற்போது பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், 2-வது அலகில் மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டங்கள் மற்றும் கூலிங் டவர் சோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.