தூத்துக்குடி,
தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக மும்பையில் இருந்து பெங்களூரு, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சிறப்பு ரெயில் (வ.எண்.01005) மும்பையில் இருந்து வருகிற 21-ஆம் தேதி முதல் வருகிற ஜூன் மாதம் 2-ஆம் தேதி வரை (செவ்வாய்க்கிழமைகளில்) நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 7.55 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. நண்பகல் 11.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.01006) தூத்துக்குடியில் இருந்து வருகிற 22-ஆம் தேதி முதல் வருகிற ஜூன் மாதம் 3-ஆம் தேதி வரை (புதன்கிழமைகளில்) மாலை 3.30 மணிக்கு புறப்படும் எனற அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இணைப்பு ரெயில் தாமதம் காரணமாக தூத்துக்குடி - மும்பை சிறப்பு ரெயில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதிலாக இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.