தேர்தல் கமிஷன் 
தமிழக செய்திகள்

வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் ‘படிவம் 6'-ஐ சமர்ப்பிக்கலாம்; தேர்தல் கமிஷன் தகவல்

டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்த அச்சம் தேவையற்றது என்றும் தேர்தல் கமிஷன் உறுதிபட தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட பழைய வாக்காளர்கள், தங்களது பெயரை மீண்டும் சேர்க்க 'படிவம் 6'-ஐ அச்சமின்றி சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. முன்பு பட்டியலில் பெயர் இருந்து, தற்போது நீக்கப்பட்ட வாக்காளர்கள் புதிய படிவம் 6-ஐ சமர்ப்பிப்பதில் தயக்கம் காட்டி வந்தனர். ஏனெனில், இந்த படிவத்தில் 'முதல் முறையாக பெயர் சேர்க்க விண்ணப்பிக்கிறேன்' என்ற உறுதிமொழி உள்ளது. இதனால், தவறான தகவல் அளித்ததாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயுமோ என்ற அச்சம் நிலவியது.

இதுகுறித்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், "வரைவு பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் இறுதிப் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-ஐ தாராளமாக வழங்கலாம். முந்தைய பதிவின் காரணமாக இந்த படிவத்தை அளிப்பது தவறான பிரகடனமாகாது. அவர்கள் மீது தேர்தல் அதி காரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது" என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்த அச்சம் தேவையற்றது என்றும் தேர்தல் கமிஷன் உறுதிபட தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT