சென்னை,
வங்கிக் கணக்கு இல்லாதவர்களும் இனி வங்கிக் கிளைக்கு நேரில் சென்று, ரொக்கமாக பணத்தை செலுத்தி மற்றொருவரின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப முடியும். இதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, வங் கிக் கிளைக்கு நேரில் வரும் ஒருவர், ஒரு பரிமாற்றத்துக்கு அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை ரொக்கமாக செலுத்தி, 'நெப்ட்' முறையில் மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பலாம். இதற்காக பணம் அனுப்புபவரின் அடையாளத்தை வங்கி சரிபார்க்க வேண்டும். அவருடைய செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
பணப் பரிமாற்றம் முடிந்ததும் அதற்கான தகவல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இந்த வசதியை பயன்படுத்துபவர்களின் பரிமாற்றங்களை வங்கிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய பரிமாற்றங்கள் இருந்தால் அவற்றை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.