தமிழக செய்திகள்

மிரட்டும் கனமழை: சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன..?

தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னைக் குடிநீர் வாரியம்:-

299 தூர்வாரும் இயந்திரங்கள், 73 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 181 ஜெட்ராடிங் வாகனங்கள், 45 ஜெட்டிங் மற்றும் உறிஞ்சும் இயந்திரங்கள். 3 கழிவுநீர் ஊர்திகள். 3 கழிவுநீர் அகற்றும் ரோபோ இயந்திரங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள 100 கழிவுநீர் ஊர்திகள் என மொத்தம் 704 கழிவுநீர் அகற்றும் இயந்திரங்கள் கழிவுநீர் அகற்றும் பணிகளுக்காக தயார்நிலையில் உள்ளது.

* 15 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் 2,149 களப்பணியாளர்கள் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் பணிகளை மேற்கொள்ள ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 111 சமையல் கூடங்கள் மற்றும் 215 வெள்ள நிவாரண மையங்களுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.