தமிழக செய்திகள்

சேலம் அருகே மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி..!

மேய்ச்சலில் இருந்த விவசாயி சின்னசாமிக்கு சொந்தமான ஒரு பசு மாடும், லதா என்பவருக்கு சொந்தமான 2 பசு மாடுகளும் மின்னல் தாக்கி இறந்தன.

சேலம்,

மேட்டூரில் மின்னல் தாக்கி 3 பசு மாடுகள் இறந்தன.

கனமழை

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம் மாநகரில் நேற்று முன்தினம் இரவு 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

தம்மம்பட்டி, வாழப்பாடி, கரியகோவில் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாமல் கனமழை பெய்ததால் சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது. குறிப்பாக அந்த பகுதியில் வயல்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கியதால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதேபோல், மேட்டூர், வீரகனூர், டேனிஷ்பேட்டை பகுதிகளிலும் கனமழை பெய்தது.

3 மாடுகள் பலி

மேட்டூர் மூலக்காடு கிராமத்தில் கனமழை பெய்தபோது திடீரென மின்னல் தாக்கியதில் அந்த பகுதியில் மேய்ச்சலில் இருந்த விவசாயி சின்னசாமிக்கு சொந்தமான ஒரு பசு மாடும், லதா என்பவருக்கு சொந்தமான 2 பசு மாடுகளும் மின்னல் தாக்கி இறந்தன. இதனை பார்த்து அதன் உரிமையாளர்கள் கண் கலங்கினர்.

SCROLL FOR NEXT