தமிழக செய்திகள்

யூடியூபர் முக்தார், திருச்சி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி சூர்யாவை முதலில் கைது செய்தனர்.

சென்னை,

தமிழக பா.ஜனதா மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலாளர் அலிஷா அப்துல்லா, 'யூடியூபர்கள்' முக்தார், திருச்சி சூர்யா ஆகியோர் தனது குழந்தைகள் மீது அவதூறு பரப்பியதாக சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் அளித்தார். அதில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி சூர்யாவை முதலில் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தார் கர் நாடகா மாநிலத்தில் வைத்து கடந்த வாரம் கைது செய்யப்பட் டார். அப்போது அவர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் இருப்பதாகவும், 20-க்கும் மேற்பட்ட புகார்கள் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் யூடியூபர் முக்தார், திருச்சி சூர்யா ஆகிய 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பிறப்பித்துள்ளார். 'யூடியூப்' சமூக வலைத்தளத்தில் இவர்கள் 2 பேரும் பெண்கள் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.