தமிழக செய்திகள்

சர்வதேச பாரா பேட்மிண்டன் தொடரில் மூன்று பதக்கங்களை வென்ற துளசிமதி முருகேசன் - டிடிவி. தினகரன் வாழ்த்து

துளசிமதி முருகேசனின் வெற்றிப்பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

சென்னை,

ஸ்பெயினின் விட்டோரியா-காஸ்டீஸ் நகரில் நடைபெற்ற ஸ்பானிஷ் பாரா பேட்மிண்டன் சர்வதேச தொடரில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று பதக்கங்களை வென்று அசத்தினார். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் துளசிமதி முருகேசனுக்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பாரா பேட்மிண்டன் தொடரில் 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கும் தமிழகத்தின் தங்க மங்கை துளசிமதி முருகேசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர் முயற்சி மற்றும் தளராத தன்னம்பிக்கையின் மூலம் பதக்கங்களைக் குவித்து ஒட்டுமொத்த தாய் திருநாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கும் துளசிமதி முருகேசனின் வெற்றிப்பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.