திருச்சி,
இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக ரெயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதனைகள் தீவிரமாக நடத்தப்பட்டன.
அந்த வகையில் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் நேற்று ஒரே நாளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், டிக்கெட் இன்றி பயணித்த 408 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.7.38 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி ரயில்வே கோட்டத்தில் ஒரே நாளில் வசூலிக்கப்பட்ட அதிகபட்ச அபராதத் தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.