நீலகிரி,
நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதிகளை கொண்டுள்ளது. இங்கு புலி, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, மான், கடமான், சிறுத்தை, காட்டு யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்கின்றன.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தின் ஊட்டியில் வனப்பகுதிகள் நிறைந்த மசினகுடி வழியாக செல்லும் சாலையில் அவ்வப்போது வனவிலங்குகள் தென்படுவது வழக்கம்.
அந்த வகையில் மசினகுடி அருகே சீகூர் பகுதியில் உள்ள சாலையில் நேற்று இரவு கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென அந்த சாலையை புலி கடந்து சென்றது. வனப்பகுதி நிறைந்த பகுதியில் இரவில் அந்த புலி சாலையை கடந்து சென்றது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.