தூத்துக்குடி,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
நெல்லை சந்திப்பு ரெயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 14-ந் தேதி வரை திருச்செந்தூர்-நெல்லை பயணிகள் ரெயில் (56004), நெல்லை சந்திப்பு-திருச்செந்தூர் பயணிகள் ரெயில் (56003) ஆகியவை ரத்து செய்யப்பட்டு உள்ளன.
மேலும் 14-ந் தேதி திருச்செந்தூர்-நெல்லை பயணிகள் ரெயில் (56752) செய்துங்கநல்லூர்-நெல்லை சந்திப்பு இடையே பகுதியாகவும், நெல்லை-திருச்செந்தூர் பயணிகள் ரெயில் (56753) நெல்லை சந்திப்பு-செய்துங்கநல்லூர் இடையே பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.