தமிழக செய்திகள்

திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆய்வு

திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி 27.10.2025 அன்று சூரசம்ஹார நிகழ்வும், 28.10.2025 அன்று திருக்கல்யாண நிகழ்வும் நடைபெற உள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கி 27.10.2025 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 28.10.2025 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது.

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமணி மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகம், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதி, கோவில் சுற்றுவட்டார பகுதி மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் உள்ள சாலைகள் மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்கள் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள், போக்குவரத்து மாற்றங்கள் உள்ள சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் அதுகுறித்த அறிவிப்பு பலகைகள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயன்படும் வகையில் அனைத்து இடங்களிலும் வைக்க வேண்டும் எனவும், காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். இந்த நிகழ்வின்போது திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. மகேஷ்குமார் உட்பட காவல்துறையினர் மற்றும் திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் ராமு ஆகியோர் உடனிருந்தனர். 

SCROLL FOR NEXT