திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோபியா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தெற்கு கும்பலம்பாடு, கிழக்கு தெருவில் உள்ள ராணி என்பவரது பெட்டிக்கடையை சோதனை செய்தனர்.
அப்போது அங்கே அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 23 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பழவூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் (பணகுடி காவல் நிலைய பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ராணியை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து சுமார் 23 கிலோ புகையிலை பொருட்களையும் கைப்பற்றி உரிய சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்.