தமிழக செய்திகள்

திருநெல்வேலி: 46 மதுபான பாட்டில்கள், 2 பைக்குகள் பறிமுதல்- 2 பேர் கைது

ஏர்வாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

திருநெல்வேலி,

ஏர்வாடி அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கே இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படி வந்த, திருவரங்கனேரி பகுதியை சேர்ந்த மிக்கேல் (வயது 34), ராமர்(61) ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட 46 மதுபான பாட்டில்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

46 மதுபான பாட்டில்கள், 2 பைக்குகள் பறிமுதல், 2 பேர் கைது:

இது தொடர்பாலக சப்-இன்ஸ்பெக்டர் பேரின்பராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்சொன்ன 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 46 மதுபான பாட்டில்களையும், 2 பைக்குகளையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.