தமிழக செய்திகள்

திருநெல்வேலி: போக்சோ வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது

அம்பாசமுத்திரம் பகுதியில் போக்சோ வழக்கில் தொடர்புடைய கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2025-ம் ஆண்டு போக்சோ வழக்கில் தொடர்புடைய கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த மாரியப்பன் (வயது 35) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

மேற்சொன்ன நபர் நீதிமன்ற விசாரணைக்கு 4 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மேற்சொன்ன நபரை அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT