தமிழக செய்திகள்

திருநெல்வேலி: கொள்ளை வழக்கில் தலைமறைவான நபர் கைது

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட தாழையூத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு கொள்ளை வழக்கில் ஈடுபட்ட தாழையூத்தை சேர்ந்த சுடலைகண்ணு(எ) துரை (வயது 37) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு இரண்டரை (2) மாதங்கள் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் சுடலைகண்ணு(எ) துரைக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவரை தாழையூத்து காவல்துறையினர் தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

SCROLL FOR NEXT