தமிழக செய்திகள்

திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பகுதியில் அடிதடி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட பணகுடி பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பகுதியில் அடிதடி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட பணகுடி, நெருஞ்சி காலனியை சேர்ந்த முருகன் மகன் சரவணன் (வயது 33) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் கொலை, மிரட்டல் மற்றும் அடிதடி போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர், சரவணன் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அவரது வேண்டுகோளின் பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், சரவணன் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.