தமிழக செய்திகள்

கொலை வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பாராட்டு

தூத்துக்குடியில் 2 கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர சிறப்பாக பணியாற்றிய தலைமை காவலர்களுக்கு திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் 2 கொலை வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய தலைமை காவலர்களை சரக அலுவலகத்துக்கு நேரில் அழைத்து திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

கொலை வழக்கில் சிறப்பான நீதிமன்ற பணிகள்

தூத்துக்குடி மாவட்டம், தெற்கு காவல் நிலைய கொலை வழக்கின் நீதிமன்றப் பணிகளில் உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை ஒருங்கிணைத்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தரும் பணியில் தலைமை காவலர் கணபதி அம்மாள் முக்கியப் பங்காற்றினார். இதேபோல் தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் நிலைய கொலை வழக்கின் நீதிமன்றப் பணிகளில் உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை ஒருங்கிணைத்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தரும் பணியில் தலைமைக் காவலர் கணேசன் முக்கியப் பங்காற்றினார்.

தலைமை காவலர்களுக்கு திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பாராட்டு

மேற்சொன்ன இரண்டு தலைமை காவலர்களையும் நேற்று திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு, சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவர்களின் சிறப்பான பணியைப் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.

SCROLL FOR NEXT