தமிழக செய்திகள்

திருநெல்வேலி - திருச்செந்தூர் பயணிகள் ரெயில் சேவை 5 நாட்களுக்கு ரத்து

ரெயில் சேவையை தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

நெல்லை,

திருநெல்வேலி, திருச்செந்தூர் இடையேயான பயணிகள் ரெயில் சேவை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, திருச்செந்தூர் இடையே பயணிகள் ரெயில் சேவை காலை முதல் இரவு வரை சீரான இடைவேளையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சேவையை தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

ரெயில் சேவை ரத்து

இந்நிலையில், திருநெல்வேலி, திருச்செந்தூர் இடையேயான பயணிகள் ரெயில் சேவை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, பராமரிப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக திருநெல்வேலி , திருச்செந்தூர் இடையேயான பயணிகள் ரெயில் சேவை நவம்பர் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை 5 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த வழித்தடத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள் மாற்றுப்போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT