தமிழக செய்திகள்

திருநெல்வேலி: முன்பகை காரணமாக மிரட்டிய வாலிபர் கைது

காங்கேயன்குளத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்கும் வேளார்குளத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் இடையே சில வருடங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு முன்பகை இருந்து வந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர், காங்கேயன்குளம், கீழத் தெருவைச் சேர்ந்த மகேஷ் (வயது 43) என்பவருக்கும் வேளார்குளத்தை சேர்ந்த சுரேஷ்(28) என்பவருக்கும் இடையே சில வருடங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு முன்பகை இருந்து வந்துள்ளது. அதனை மனதில் வைத்து கொண்டு நேற்று முன்தினம் (13.5.2025) மகேஷ் வெட்டுவான்குளம் பஸ்ஸ்டாண்டு அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த சுரேஷ், மகேஷை வழிமறித்து அவரை அவதூறாக பேசி கல்லால் தாக்க முயன்று மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து மகேஷ் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சையது நிசார் அகமது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சுரேஷை நேற்று (14.5.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

SCROLL FOR NEXT