போலீசார் விசாரணை 
தமிழக செய்திகள்

திருப்பத்தூர்: குடும்பத் தகராறில் மனைவி அடித்துக் கொலை; கணவர் தலைமறைவு

மனைவி இறந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாபு, உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவியை கணவன் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த உடையராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவருடைய மனைவி ஸ்ரீதேவி. இவர்களுக்குள் கடந்த சில நாட்களாக கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததது.

மனைவி அடித்துக் கொலை

இந்நிலையில், நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த பாபு, தனது மனைவி ஸ்ரீதேவியை கொடூரமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி இறந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாபு, உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினார்.

போலீசார் விசாரணை

இக்கொலை சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் ஆம்பூர் கிராமிய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஸ்ரீதேவியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பாபுவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இக்கொலை சம்பவம் உடையராஜபாளையம் பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.