தமிழக செய்திகள்

திருப்பத்தூர்: சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: 5 பேர் படுகாயம்....!

ஆம்பூர் அருகே சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

தினத்தந்தி

ஆம்பூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஈச்சம்பட்டியில் தேங்காய் மண்டி ஒன்ற உள்ளது. இந்த மண்டியில் இருந்து தேங்காய் லோடுகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. லாரியை டிரைவர் பாலசந்திரன் என்பவர் ஓட்டி சென்றார்.

இந்த லாரி ஈச்சம்பட்டு அருகே ஓரு வளைவில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில் லாரியில் லோடு ஏற்ற வந்த கூலித் தொழிலாளர்கள் விமல் (36), இமானுவேல் (28), யோனோவா (28), அரவிந்த் (28), ஜெகன்(40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதனை அறிந்து விரைந்து வந்த அப்பகுதியினர் காயம் அடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்