திருமாவளவன் 
தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் விவகாரம்: அரசு நீதித்துறை பயங்கரவாதத்துக்கு அஞ்சாமல் துணிந்து எதிர்கொள்ள வேண்டும் - திருமாவளவன்

உயர் அதிகாரிகளுக்கு ஆணையிடும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலைத்தூணில் இன்று தீபம் ஏற்றப்படுமா? என்று பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 5,600 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் மாநில அரசு நீதித்துறை பயங்கரவாதத்துக்கு அஞ்சாமல் துணிந்து இதனை எதிர்கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமைதான். ஆனால், நீதிபதிகளைப்போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்படமுடியாது. நீதிபதிகள் ஆவணங்களையும் ஆதாரங்களையும் சான்றுகளையும் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள் ஆவர்.

ஆனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவ்வாறு செயல்பட இயலாது. மாநில அரசின் நிலைபாட்டினையும் கருத்தில் கொண்டே செயல்பட வேண்டியிருக்கும்.

உயர் அதிகாரிகளுக்கு ஆணையிடும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு. எனவே, மாநில அரசு நீதித்துறை பயங்கரவாதத்துக்கு அஞ்சாமல் துணிந்து இதனை எதிர்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் தமிழ்நாட்டு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றத்தில் நீதியை நிலைநாட்ட உறுதிகுலையாமல் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT