தமிழக செய்திகள்

திருப்பூர்: தண்ணீர் தொட்டியில் விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 2 1/2 வயது பெண் குழந்தை, வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 1/2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தண்ணீர் தொட்டியில் விழுந்த பெண் குழந்தை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி-எஸ்தர் தம்பதியின் 2 1/2 வயது பெண் குழந்தை கனித்ரா, வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். அக்கம்பக்கத்தில் தேடியபோது, திறந்திருந்த 10 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் குழந்தை விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

உயிரிழப்பு; போலீசார் விசாரணை

இதுகுறித்த தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தொட்டிக்குள் இறங்கி தேடியபோது தண்ணீரில் மூழ்கிய நிலையில் குழந்தை மீட்கப்பட்டது. பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT