தமிழக செய்திகள்

திருப்பூர்: வேன் கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவி பலி

திருப்பூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளி மாணவிகளை ஏற்றிச் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வேன் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவி பலியானாள்.

6-ம் வகுப்பு மாணவி

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன் மகள் நந்திதா (வயது11), அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று காலை பாலசுப்பிரமணியம் என்பவர் ஓட்டிய பள்ளி வேனில் சக மாணவிகளுடன் நந்திதா சென்றாள்.

வேன் கவிழ்ந்து விபத்து

மேட்டுப்பாளையம் அருகே வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் வேனுக்குள் சிக்கிய 5 மாணவிகளை பொது மக்கள் மீட்டனர்.

மாணவி பலி

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நந்திதா பரிதாபமாக உயிரிழந்தாள். படுகாயமடைந்த மற்ற 4 சிறுமிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.