தமிழக செய்திகள்

திருவண்ணாமலை: கார்-ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து - அமெரிக்க சுற்றுலா பயணிகள் படுகாயம்

காயமடைந்த அமெரிக்க சுற்றுலா பயணிகள் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை,

கார்-ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருவர் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.

விபத்து

அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் காரில் ஏலகிரி மலைக்கு சென்றுவிட்டு திருவண்ணாமலை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் மண்மலை அருகே எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் இருந்த இரண்டு அமெரிக்க சுற்றுலா பயணிகளும் ஆட்டோ ஓட்டுனர் ஏழுமலையும் பலத்த காயமடைந்தனர்.

சிகிச்சை

இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆட்டோ ஓட்டுநர் ஏழுமலை, மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அமெரிக்க சுற்றுலா பயணிகள் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SCROLL FOR NEXT