தமிழக செய்திகள்

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.5 கோடி உண்டியல் காணிக்கை!

உண்டியல் காணிக்கையாக 160 கிராம் தங்கம் மற்றும் 1 கிலோ 540 கிராம் வெள்ளியும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

உண்டியல் காணிக்கை

இந்த நிலையில் நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியையடுத்து பக்தர்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை முதல் இரவு வரையில் நடைபெற்றது. இந்த பணி கோவில் இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் நடந்தது.

இதில் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் கோவிலில் உள்ள உண்டியல்கள் அங்கு கொண்டு வரப்பட்டு திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.5 கோடியே 6 லட்சத்து 72 ஆயிரத்து 963-ம், 160 கிராம் தங்கம், 1 கிலோ 540 கிராம் வெள்ளி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT