தமிழக செய்திகள்

பரபரக்கும் தமிழக அரசியல் களம்: தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்பு முடிவுகள் வெளியீடு

தமிழக சட்டசபை தேர்தலில் 85.10 சதவீத வாக்குகள் பதிவானது.

சென்னை,

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 85.10 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரும்பான்மைக்கு 118 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.

அதன் விவரம் பின்வருமாறு:-

பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள்

திமுக கூட்டணி - 125 முதல் 145 தொகுதிகளில் வெற்றி

அதிமுக கூட்டணி - 65 முதல் 80 தொகுதிகளில் வெற்றி

தவெக - 18 முதல் 24 தொகுதிகளில் வெற்றி

மற்றவை - 2 முதல் 6 தொகுதிகளில் வெற்றி

ஜேவிசி நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள்

திமுக கூட்டணி - 75 முதல் 95 தொகுதிகளில் வெற்றி

அதிமுக கூட்டணி - 128 முதல் 147 தொகுதிகளில் வெற்றி

தவெக - 8 முதல் 15 தொகுதிகளில் வெற்றி

மற்றவை - 0

ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள்

திமுக கூட்டணி - 92 முதல் 110 தொகுதிகளில் வெற்றி

அதிமுக கூடணி - 22 முதல் 32 தொகுதிகளில் வெற்றி

தவெக - 98 முதல் 120 தொகுதிகளில் வெற்றி

மற்றவை - 0

மெட்ரிஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள்

திமுக கூட்டணி - 122 முதல் 132 தொகுதிகளில் வெற்றி

அதிமுக கூட்டணி - 87 முதல் 110 தொகுதிகளில் வெற்றி

தவெக - 10 முதல் 12 தொகுதிகளில் வெற்றி

மற்றவரை - 0 முதல் 6 தொகுதிகளில் வெற்றி

பி-மார்கியூ நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள்

திமுக கூட்டணி - 125 முதல் 145 தொகுதிகளில் வெற்றி

அதிமுக கூட்டணி - 65 முதல் 85 தொகுதிகளில் வெற்றி

தவெக - 16 முதல் 26 தொகுதிகளில் வெற்றி

மற்றவை - 1 முதல் 6 தொகுதிகளில் வெற்றி

பீப்பிள்ஸ் இன்சைட் நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள்

திமுக கூட்டணி - 120 முதல் 140 தொகுதிகளில் வெற்றி

அதிமுக கூட்டணி - 60 முதல் 70 தொகுதிகளில் வெற்றி

தவெக - 30 முதல் 40 தொகுதிகளில் வெற்றி

மற்றவை - 0 முதல் 4 தொகுதிகளில் வெற்றி

கமஹ்யா அனாலிட்டிக்ஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள்

திமுக கூட்டணி - 78 முதல் 95 தொகுதிகளில் வெற்றி

அதிமுக கூட்டணி - 68 முதல் 84 தொகுதிகளில் வெற்றி

தவெக - 67 முதல் 81 தொகுதிகளில் வெற்றி

மற்றவை - 0

பிரஜா போல்ஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள்

திமுக கூட்டணி - 148 முதல் 168 தொகுதிகளில் வெற்றி

அதிமுக கூட்டணி - 61 முதல் 81 தொகுதிகளில் வெற்றி

தவெக - 1 முதல் 9 தொகுதிகளில் வெற்றி

மற்றவை - 0