தமிழக செய்திகள்

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று சந்தித்து பேசுகிறார்.

சென்னை,

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசுகிறார். இன்று மாலை 5 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநருடன் முதல்வர் ஆலோசனை நடத்தலாம் எனத்தெரிகிறது. இந்த ஆலோசனையில் தமிழக சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT