தமிழக செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு... ஊரக வளர்ச்சித் துறையில் 839 காலியிடங்கள்

இந்த 839 காலிப் பணியிடங்களுக்கு வருகிற 17-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஆண்டு அட்டவணையில் தெரிவித்திருந்தபடி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள பணிப்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் மற்றும் சாலை ஆய்வாளர் உள்ளிட்ட 56 பதவிகளுக்கான 839 காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது.

விருப்பம் உள்ள தேர்வர்கள் வருகிற 17-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை யு.பி.ஐ. மூலமாகவும் செலுத்தலாம். ஓ.எம்.ஆர்., கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றூம் நேரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

மேற்கண்ட தகவல் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.