தமிழக செய்திகள்

அரசின் வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்த.. மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

சென்னை,

மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும். பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும். இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும். அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சார்ந்த திட்டப் பலன்களும் பொதுமக்களுக்கு விரைவாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு சீரிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது.

இயற்கைச் சீற்றம். நோய்த்தொற்று மற்றும் பல்வேறு இடர்பாடான சூழ்நிலைகளில், இந்தத் திட்டப் பணிகளை மாவட்ட அளவில் கூர்ந்தாய்வு செய்து, விரைவுபடுத்தும் வகையில் ஏற்கனவே இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்களாக (Monitoring Officers) நியமித்து அரசு கண்காணித்து வருகிறது.

இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமைச்சர் பெருமக்களையும் இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

மாவட்ட வளர்ச்சிப் பணிகள்

அதன்படி, அமைச்சர் பெருமக்களை. அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும். இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும். வருவாய் மாவட்ட வாரியாக, அமைச்சர்களை பொறுப்பு அமைச்சர்களாக பின்வருமாறு நியமனம் செய்யப்படுகின்றனர்.