சென்னை,
சட்டமன்றத்தேர்தல் தோல்விக்கு பின்பு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. இதனையடுத்து எஸ்.பி.வேலுமணி தரப்பினரின் கட் சிப்பதவிகளை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி யாக பறித்தார். மேலும் புதிய நிர்வாகிகளும் அதிரடியாக நியமிக்கப்பட்டனர். அ.தி.மு.க. மீண்டும் இணைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் பிரிந்து சென்றவர்களின் பொறுப்புகளை குறிப்பிட்டு அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
இந்தநிலையில் கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் பழைய பொறுப்புகளைக் கொண்டு விளம்பரப்படுத்த வேண்டாம் என கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இது மீண்டும் அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் விஜய்க்கு ஆதரவு அளித்துவிட்டு மீண்டும் மனம் திருந்தி வந்தவர்களுக்கு பறிக்கப்பட்ட பதவியை மீண்டும் வழங்க முடியாது என்பதில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக இருப்பதை இந்த அறிவிப்பு காட்டுவதாக அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.