தமிழக செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) ஆடி கிருத்திகையை முன்னிட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருநாள் விடுமுறை அளித்து கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) அன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆடி கிருத்திகையையொட்டி மாவட்டத்தில் உள்ள ரத்தினகிரி பாலமுருகன் கோவில் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோவில் மற்றும் இதர முருகன் கோவில்களுக்கு பக்தர்கள், பொதுமக்கள் அதிகளவில் காவடி எடுத்து பஸ்களில் சென்று வருவார்கள்.

இதனால் பஸ்களை பயன்படுத்தி பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ- மாணவிகளுக்கு சிரமம் ஏற்படும். அதனை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்