தமிழக செய்திகள்

200 பேரை பலிகொண்ட கோர தினம் இன்று... அழியாத சுவடாகிய அரியலூர் ரெயில் விபத்து

ரெயில் வந்த சமயத்தில் ஆற்று வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டது.

அரியலூர்,

அரியலூரில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் (நவம்பர் 23-ந் தேதி) கல்நெஞ்சையும் நொறுக்கும் வகையில் ரெயில் விபத்து நடந்தது.

அதைப்பற்றிய விவரம் வருமாறு:-

சென்னை-தூத்துக்குடி ரெயில்

கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந் தேதி சென்னையில் இருந்து இரவு 9 மணிக்கு தூத்துக்குடி நோக்கி 12 பெட் டிகளுடன் ஒரு ரெயில் புறப்பட்டது. வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் அப்போது மிக கனமழை பெய்தது.

இதனால் அரியலூர்-சில்லக்குடி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மருதையாற்றில் அபாய அளவைத்தாண்டி தண்டவாளங்களை தொட்டபடி மழைநீர் சென்றது. அப்போது அரியலூர் ரெயில் நிலையத்தை தாண்டிய தூத்துக்குடி ரெயில் மருதையாற்று பாலத்தின் மீது சென்றபோது, அனைத்து பெட் டிகளும் திடீரென ஆற்றில் கவிழ்ந்தன.

இதற்கான காரணம், ரெயில் வந்த சமயத்தில் ஆற்று வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டு தண்டவாளங்கள் மட்டுமே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது என்பது பின்புதான் தெரியவந்தது. இந்த விபத்தில் பலர் இறந்துவிட்டனர். பலர் உடைந்த பெட்டிகளுடன் பல மைல் தூரத்திற்கு நீரில் இழுத்துச்செல்லப்பட்டனர். ரெயில் விபத்து நடந்த தகவல் அதிகாலையில்தான் தெரியவந்தது.

200 பேர் சாவு

அந்த நேரத்தில் படுகாயமடைந்தவர்களின் அபய குரலும், முனகல் சத்தங்களும், மரண ஓலமும் கேட்டுள்ளது. இதற்கி டையே பயங்கர சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அருகே உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், அங்கு சென்று உயிருக்கு போராடிய சிலரை மீட்டனர். மேலும் அங்கு வந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் அவசர கால மீட்பு படையினர், ரெயில் பெட்டிகளில் இடிபாடுகளில் சிக்கியவர் களில் சிலரை மீட்டனர்.

இந்த ரெயில் விபத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்போது ரெயில்வே மந்திரியாக இருந்த லால்பகதூர் சாஸ்திரி ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த கோர விபத்து நடந்து இன்றுடன் 70 ஆண்டுகள் ஆனபோதிலும் மக்களின் மனதில் ஆறாத வடுவாகிப்போனது.

SCROLL FOR NEXT