தமிழக செய்திகள்

தமிழக சட்டசபையில் இன்றைய கூட்ட நிகழ்வுகள் என்னென்ன..?

இன்றைய கூட்டத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள்.

சென்னை

தமிழக சட்டசபையில் துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டசபையில் இன்றைய கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடிந்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.