தமிழக செய்திகள்

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 1-ந்தேதி முதல் கட்டண உயர்வு

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வருகிற 1-ந்தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்ததப்படுகிறது.

விழுப்புரம்,

கட்டண உயர்வு

விழுப்புரம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வருகிற 1-ந்தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்ததப்படுகிறது. இந்த சுங்கச்சாவடியில் ஆண்டுதோறும் நகாய் உத் தரவின் பேரில் புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு புதியதாக அறிவிக்கப்பட்ட சுங்கவரி கட்ட ணம் விவரம் பின்வருமாறு:

கார், ஜீப், பயணிகள் வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஒரு வழி கட்டண மாக ரூ.105-லிருந்து ரூ.110 ஆகவும், பல முறை பயணிக்க ரூ.160-லிருந்து ரூ.165 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.3,170-லிருந்து ரூ.3300 ஆகவும் உயர்த்தியுள்ளது. இதேபோல் இலகு ரக வாகனத்திற்கு ஒரு வழி கட்டணம் ரூ.185-லிருந்து ரூ.190 ஆகவும், பல முறை பயணிக்க ரூ.275-லிருந்து ரூ.290 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.5,545-லிருந்து ரூ.5 ஆயிரத்து 770 ஆகவும், டிரக், பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு வழி கட்டணமாக ரூ.370-லிருந்து ரூ.385 ஆகவும், பல முறை பயணிக்க ரூ.555-லிருந்து ரூ.575 ஆகவும், மாதாந்திர கட்டணமாக ரூ.11,085-லிருந்து, ரூ.11.545 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பள்ளி பஸ்களுக்கு மாற்றம் இல்லை

பல அச்சுகள் மற்றும் இரு அச்சுகளுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு ஒரு வழி கட்டணமாக ரூ.595-லிருந்து ரூ.620 ஆகவும், பல முறை பய ணிக்க ரூ.890-லிருந்து ரூ.930 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.17,820-ல் இருந்து ரூ.18,555 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி பேருந்துகளுக்கு மாதாந்திர கட்டணம் ரூ.1000-மும், உள் ளூர் வாகன கட்டணம் வகைகளான மாதாந்திர பாஸ் ரூ.150 மற்றும் ரூ.300 ஆகியவை எந்தவித மாற்றமின்றி வசூலிக்கப்படவுள்ளது. இந்த ஆண்டு புதிய கட்டண உயர்வில் சிறிய மாற்றம் மட்டும் செய்து மாதாந் திர கட்டணத்தில் சற்று உயர்த்தி நகாய் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக் கது.