தமிழக செய்திகள்

சென்னை வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு

கடந்த ஆண்டு மொத்த விலை குறியீடு கட்டணத்தை நெடுஞ்சாலை அமைச்சகம் குறைத்தது.

சென்னை,

கட்டண உயர்வு

தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகளில் 80 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 66 சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஏப்.1-ந்தேதியும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில், செப்டம்பர் 1-ந்தேதியும் மாற்றம் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் காரணமாக ஏப்ரல் மாத கட்டண உயர்வு, மே 23-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.

தற்போது சென்னை புறவழிச்சாலையில் உள்ள வானகரம், அம்பத்தூர் அருகில் உள்ள சூரப்பட்டு உள்பட 10-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில், புதிய கட்டணங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. வாகனங்களுக்கு ஏற்ப ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.30 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் அமலுக்கு வந்துள்ளது.

2-வது கட்டண உயர்வாகும்...

அதுபோல், சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் தனியார் வாகன உரிமையாளர்களுக்கான, மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.350 லிருந்து ரூ.360 ஆக உயர்த்தப்பட் டுள்ளது. மே மாதத்திற்கு பிறகு, இது 2-வது கட்டண உயர்வாகும். இதனால்

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், கடந்த ஆண்டு மொத்த விலை குறியீடு கட்டணத்தை குறைத்தது. இந்தநிலையில், இதுதொடர்பான வழக்கில், கோர்ட்டு முந்தைய விலை குறியீடு கட்டணத்தை, மீண்டும் பயன்படுத்த உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், அமைச்சகம் கடந்த மாதம் 29-ந்தேதி சுற்றறிக்கை வெளியிட்டு, பழைய கணக்கீட்டு முறையை மீண்டும் அமல்படுத்தியது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஒரு முறை கட்டணம் குறைப்பு ரத்து செய்யப்பட்டு, பல தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில், கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளது.