தமிழக செய்திகள்

மாணவர்கள் சந்தேகங்களை கேட்க இலவச தொலைபேசி எண்

மாணவர்கள் சந்தேகங்களை கேட்க இலவச தொலைபேசி எண் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பல்வேறு காரணங்களால் மாணவ-மாணவிகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நிலையினை தவிர்க்கும் வகையில், அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்திடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிரத்யேகமாக 1800 425 9565 என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர சேவை நிலையமான ஒன் ஸ்டாப் சென்டரில் இந்த இலவச எண் இணைக்கப்பட்டிருக்கும். இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு மன அழுத்தம் தொடர்பான ஆலோசனைகளை கேட்கும் மாணவ-மாணவிகளுக்கு மனநல மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனை வழங்கப்படும். இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசுபவர்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து