சென்னை,
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 77 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஆண்டுக்கு 2 முறை கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம்.
அதன்படி நேற்று நள்ளிரவு முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. வாகனங்களுக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.30 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியாக செல்லும் கார், ஜீப், பயணிகள் வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கான ஒரு வழி கட்டணம் ரூ.105-ல் இருந்து ரூ.110 ஆகவும், பலமுறை பயனணிக்க ரூ.160-ல் இருந்து ரூ.165 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இலகுரக சரக்கு வாகனங்களுக்கு ஒரு வழி கட்டணம் ரூ.185-ல் இருந்து ரூ.190 ஆகவும், பல முறை பயணிக்க ரூ.275-ல் இருந்து 290 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு வழி கட்டணம் ரூ.370-ல் இருந்து ரூ.385 ஆகவும், பல முறை பயணிக்க ரூ.555-ல் இருந்து ரூ.575 ஆகவும், உயர்த்தப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒருமுறை பயணம் செய்வதற்கான கட்டணம் மாற்றமின்றி ரூ.70 ஆக தொடருகிறது. பலமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.105 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இலகுரக வணிக வாகனங்களுக்கான ஒருமுறை ஆயண கட்டணம் ரூ.125 (பழைய கட்டணம் ரூ.120), பலமுறை பயண கட்டணம் ரூ.185 (பழைய கட்டணம் ரூ.180) ஆக உயர்த்தப்பட்டுள்ளது. லாரி மற்றும் பஸ்களுக்கான ஒருமுறை பயண கட்டணம் ரூ.240-ல் இருந்து ரூ.250 ஆகவும், பலமுறை கட்டணம் ரூ.355-ல் இருந்து ரூ.375 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் கார், பயணிகள் வேன் மற்றும் ஜீப் ஆகியவை ஒரு முறை பயணத்திற்கு ரூ.70-ல் இருந்து ரூ.75ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பல முறை பயணிக்க ரூ.105-ல் இருந்து ரூ.110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக வணிக வாகனம் ஒருமுறை பயணத்திற்கு கட்டண மாற்றமின்றி ரூ.125 ஆக உள்ளது. பலமுறை பயணிக்க ரூ.165-ல் இருந்து ரூ.190 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பஸ், லாரி ஒரு முறை பயணத்திற்கு ரூ.345-ல் இருந்து ரூ.255 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பல முறை பயணிக்க ரூ.370-ல் இருந்து ரூ.380 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் - மதுரை 4 வழிச்சாலையில் கொடை ரோடு கொழிஞ்சிபட்டியில் வேன் ஆகிய வாகனங்களுக்கான சுங்கச்சாவடியில் கார், ஜீப், ஒருமுறை பயண கட்டணம் ரூ75-ல் இருந்து ரூ.80 ஆகவும். இருமுறை பயண கட்டணம் ரூ.115-ல் இருந்து ரூ.120 ஆகவும் உயர்ந்தது.
இலகுரக வணிக வாகனங்களுக்கான ஒருமுறை கட்டணம் ரூ.135-ல் இருந்து ரூ.140 ஆகவும், இருமுறை பயண கட்டணம் ரூ.200-ல் இருந்து ரூ.310 ஆகவும் அதிகரிந்தது. பஸ், லாரிக்கு ஒருமுறை பயன கட்டணம் ரூ.270-ல் இருந்து ரூ.280 ஆகவும், இருமுறை பயண கட்டணம் ரூ.405-ல் இருந்து ரூ. 470 ஆகவும் உயர்ந்தது.